1x9=7 ஏன்?

1×9=7
2×9=18
3×9=27
4×9=36
5×9=45
6×9=54
7×9=63
8×9=72
9×9=81
10×9=90

மேலே உள்ள சமன்பாடு ஆசிரியை ஒருவரால் கரும்பலகையில் எழுதப்பட்டது. இந்த சமன்பாடு எழுத ஆரம்பிதது முதல் வகுப்பறை முழுவதும் சிரிப்பொலி தொடர்ந்து கொண்டிருந்தது. காரணம் முதலாவது சமன்பாடு பிழையாக எழுதப்பட்டிருந்தது. மாணவர்களைச் சிரிக்கத் தூண்டியது.

சமன்பாட்டை எழுதி முடித்து மாணவர்களை நோக்கிய ஆசிரியை சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு பேசத் துவங்கினார்..

நான் முதல் சமன்பாட்டை பிழையாக எழுதியிருக்கின்றேன். இவ்வாறு எழுதியதற்கு ஒரு காரணமுண்டு. இதன் மூலம் உங்களுக்கொரு படிப்பினையைக் கற்றுத் தருவதே அதன் நோக்கம்.

இந்த உலகம் உங்களை எவ்வாறு மதிப்பிடுகின்றது என்பதை நீங்கள் இதன் மூலம் புரிந்து கொள்வீர்கள்.

நான் இங்கு 9 முறைகள் மிகச் சரியாக  எழுதியிருக்கின்றேன். அதற்காக நீங்கள் யாரும் என்னைப் பாராட்ட முன்வரவில்லை. ஆனால் நான் பிழையாக எழுதிய ஒரே ஒரு விடயத்தைக் காரணங்காட்டி அனைவரும் சிரித்து கேலி செய்து விட்டீர்கள்.

நீங்கள் இலட்சம் தடவைகள் விஷயங்களைச் சரியாக செய்த போதிலும் இந்த உலகம் உங்களை ஒரு போதும் பாராட்டப் போவதில்லை.ஆனால் நீங்கள் செய்த ஒரு பிழையைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு ஒருமித்து நின்று மிகக் கீழ்த்தரமாக விமர்சிக்கும்..

இவைகளைக்கண்டு ஒரு போதும் தளர்ந்து விடாதீர்கள். உங்களைப் பார்த்து சிரித்தவர்கள்,  உங்களை விமர்சித்தவர்கள் முன்னால் உயர்ந்து நிற்கும் முயற்சியில் உறுதியாக நில்லுங்கள்...
அனைவரும் பாராட்ட உயர்ந்து வாழ்வீர்கள்...

படித்ததில் பிடித்தது...

பார்த்தாலே பரவசம்

ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது.

இருவடை எடுத்து ஒருவடை என்பார் திருவோடு ஏந்தி தெருவோடு போவார்.

மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு ஒரு வடைதான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் வடை எடுக்கிற எல்லோருக்கும் இது சங்கடத்தையே ஏற்படுத்தும்.

இதைப் படிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் மன உணர்விற்கும் இனி வரும் வரிகளை படிக்கும்போது ஏற்படும் மன உணர்விற்கும் உள்ள வித்தியாசத்தினை கவனியுங்கள்.

ஒரு ஆட்டோவில் எழுதப்பட்ட வாசகம், ‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு.’
டிரைவர் சீட்டின் முதுகில் எழுதப் பட்டிருந்தது இந்த வாசகம். இறங்கிய பின் யாரையும் பேரம் பேச விடாது. மீட்டருக்கு மேல ஐந்து ரூபாய் போட்டுக் கொடுங்க சார் என்கிற வார்த்தைக்கும் இந்த வாசகத்திற்கு எத்தனை வேறுபாடு. அதனால் தான் சொல்கிறேன், சொல்லும் விதத்தில் வெல்லலாம்.

ஒரு மொத்த விற்பனை மீன் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம்,
*‘மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன். மீனவன் சாப்பிட வேண்டாமா?’*
வார்த்தைகளில் இல்லை வெற்றி. அது வெளிவரும் விதத்தில்தான் வெற்றி இருக்கிறது.

```டீக்கடை வரியும் ஆட்டோவில் எழுதப்பட்ட வரிகளும் ஒரே விஷயத்தினைத்தான் சொல்கிறது. ஆனால் சொல்லப்பட்ட விதம்தான் அதில் வித்தியாசம்.
சொல்ல வந்ததை அழகாக சொல்வது ஒரு கலை```. *நினைக்கும் விஷயங்களை எல்லாம் பேசாமல் அதை செம்மைபடுத்தி பேசிப்பாருங்கள் வெற்றி நிச்சயம்.*

ஒரு ஹோட்டலில் எழுதி மாட்டி இருக்கும் வாசகம், *‘வீட்டு சமையலுக்கு ஒரு நாள் விடுமுறை விடுங்கள்.’*

இப்படி காணும் வார்த்தைகளில் கட்டி இழுத்தால் அது பார்த்தாலே பரவசம் தான்.

HAPPY PURE LEARNING

நவீன இராமாயணம்

ராமாயணப் போரின் இறுதிக்கட்டம்.
போர்க்களம் எங்கும் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது.
போரில் தோல்வி  அடைந்த ராவணன் மரண அவஸ்தையில் மரண தேவதையின் வரவுக்காகக் காத்திருக்கிறான்.

இந்நிலையில் ஸ்ரீ ராமபிரான் தம்பி லக்ஷ்மணனைக் கூப்பிடுகிறார். "என்ன வேலையாகக் கூப்பிட்டீர்கள் அண்ணா?...

தம்பி..உனக்கு ஒரு முக்கியமான வேலை கொடுக்கிறேன்.ராவணன் என்னதான் தப்பான காரியம் செய்திருந்தாலும் அவன் ஒரு சக்கரவர்த்தி, சிறந்த சிவ பக்தன், பாடகன், தங்களை நன்கு அறிந்தவன், நேர்மையாளன். அதனால் நீ அவனிடம் சென்று அவன் உயிர் பிரிவதற்குள் ஏதாவது நல்லதைக் கற்று கொண்டு வா! என்று சொல்லவும் தமையன் சொல் தவறாத தம்பியும் கிளம்பிச் சென்றான்.

ராவணன் தலைமாட்டுக்கருகில்  நின்றான். காலடிஓசையைக் கேட்ட ராவணன் விழிகளைத் திறந்து பார்த்தான். ஒன்றும் பேச வில்லை.
ஏதாவது சொல்லக்கூடும் என்று எதிர் பார்த்துக் காத்திருந்து அலுத்துப்போன லக்ஷ்மணன் ராமரிடம் வந்து முறையிட்டான்.

எல்லா விவரங்களையும் அறிந்து கொண்ட எம்பிரான் மெல்ல பொருள் பொதிந்த புன்னகையொன்றை வீசினார்.
"தம்பி...உபதேசம் அறிவுரைபோன்றவை மகான்களிடமிருந்து கேட்கும் போது அவர்கள் காலடி அருகில் நின்று கொண்டு கேட்பது தான் பண்பு. அதுதான் மரியாதை.
நீயும் அதன்படியே நடந்து கொள்" என்று அறிவுரை சொல்லி அனுப்பினார்.

இந்த முறை தன் கால்களுக்கருகில் நின்று கொண்டிருந்த லக்ஷ்மணனை ஏமாற்ற வில்லை ராவணன்.
அந்த வேதனையையும் மீறி அவன் முகத்தில் மலரந்தது ஒரு பாசப்புன்னகை.
"தம்பி லக்குமணா..சிறிது என்னருகில் உன் காதைக்கொண்டு வா. எனக்குத்தெரிந்த வாழ்க்கைக்கு முக்கியமான மூன்று விஷயங்களைப்பற்றிக் கூறுகிறேன்."

1. Smart Phone வாங்காதே.
Smart boy என்று பேர் வாங்கு.

2. Face Book-யை தப்பி தவறிக் கூட உபயோகபடுத்தாதே.

உன் எதிரில் இருக்கும் மனிதர்களின் face தான் சிறந்த book.

3. கடைசியும் முக்கியமான ரகசியம் என்னவென்றால்...

Whats App Group-ல் சேர்ந்து time waste பண்ணாதே, family கூட பொழுதை கழித்தால்...

நீ ஹேப்பி !..
உன் family ஹேப்பி
😳😜😜😝
😳😜😜😝

தமிழ் Pythagoras - போதையனார்

இனி பிதாகரஸ் தேற்றம் என்று சொல்லாதீர்கள்.

கணித தேர்விற்காக பிதாகரஸ் தேற்றத்தை மனப்பாடம் செய்து கொண்டிருந்தாள் அமிர்தா.

இதை கேட்டபடியே உள்ள வந்து கொண்டிருந்த அமிர்தாவின் பாட்டனார் இரத்தினம், "என்னம்மா பிதாகரஸ் தேற்றத்தை மனப்பாடம் செய்கிறாயா?" என்றார்.
"ஆமாம் தாத்தா. ரொம்ப கடினமா இருக்கு, இதை எப்படித்தான் கண்டுபிடிச்சாங்களோ!" என்றாள்.

இரத்தினம் தாத்தா:
"இந்த தேற்றம் கி.மு 500ல் பிதாகரஸ் என்ற கணித அறிஞர் தொகுத்தார், அதனால் "பிதாகரஸ் தேற்றம்" என்று பெயர் வந்தது. ஆனால் அதுக்கும் முந்தியே நம்ம தமிழ் அறிவியலாளர்கள் அதை பாட்டாவே சொல்லிருக்காங்க தெரியுமா"
அமிர்தா: "சும்மா பொய் சொல்லாதீங்க தாத்தா"

இரத்தினம் தாத்தா: "சொல்றேன் கேள்,
இன்றைக்கு நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பிதாகரஸ் கோட்பாடு (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, *போதையனார்* என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.

"ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே"
- போதையனார்

விளக்கம்:
இவற்றின் பொருள் செங்கோண முக்கோணத்தின், நீளத்தில் (அடிப்பாகம்) 8 பங்கில் ஒன்றைக் கழித்துவிட்டு உயரத்தில் பாதியை எடுத்து கூட்டினால் வரும் நீள அளவே கர்ணம் என்பதாகும்.

இவ்வளவு எளிமையாக கர்ணத்தின் நீளம் காணும் வாய்ப்பட்டை விட்டுவிட்டு வர்க்கமூலம், பெருக்கல் என பிதார்கரஸ் தியரம் சொல்லிவருவதை நாம் பயன்படுத்துகிறோம் இன்று.

இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.

போதையனார் கோட்பாட்டின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் அதாவது Square root இல்லாமலேயே, நம்மால் இந்த கணிதமுறையை பயன்படுத்த முடியும். ✔
தமிழன் ஒருவேளை கற்றலையும் / கல்வியையும் பொதுவுடமையாக, உலகறியச் செய்து இருந்தால் .... அவர்கள் தரணி எங்கும் அறியப்பட்டு இருப்பார்கள்." என்றார்.

அமிர்தா: "தாத்தா இது ரொம்ப எளிதாக இருக்கு, இதை படிச்சாலே நான் எளிதாக தேர்வில் எழுதி முழு மதிப்பெண்ணும் வாங்கிடுவேன். ரொம்ப நன்றி தாத்தா" என்றாள்.
--------------------------------
இது வெறும் கதை அல்ல.
நிரூபணம்:
நீளம் = 4m, உயரம் = 3m.
எனில் கர்ணம்,
பிதாகரஸ் தேற்றம்:
கர்ணம் = √(4^2 + 3^2) = 5

போதையனார் கோட்பாடு:
கர்ணம் = (4-(4÷8)) + (3÷2) = 5 😍😍😍

தமிழன் டா என்நாளும்!!!..

நன்றி:-... முனைவர்.க. நளினி பிரியா ., கணித்தமிழ்ப்  பேரவை., சவீதா  பொறியியல்  கல்லூரி, சென்னை

Gandhi is not Father of nation

The title "The Father of the Nation" for Gandhi is not an official title and has not been officially accorded by Government of India. An RTI query filed by a 10-year-old girl from Lucknow in February 2012 revealed that PMO has no records of ever according such title to Gandhi. MHA and National Archives of India also communicated of not having any records. Origin of this title is traced back to a radio address (on Singapore radio) on 6 Jul 1944 by Subhash Chandra Bose where Bose addressed Gandhi as "The Father of the Nation". On 28 Apr 1947, Sarojini Naidu during a conference also referred Gandhi as "Father of the Nation". The RTI applicant had also pleaded for Gandhi to be officially declared as "Father of the Nation" to which the MHA informed that Gandhi cannot be accorded with the title by Government of India since the Indian constitution does not permit any titles except educational and military titles.

2020 ஔவையார்

"முருகா, பூலோகத்திற்கா சென்றிருந்தாய்?"

"ஆம் ஔவையே,
ஆதார் அட்டை வாங்க சென்றிருந்தேன்.

நல்ல கூட்டம். கையில் மை வேறு வைத்துக் கொண்டிருந்தார்கள்.  பன்னிரு கைகளிருந்ததால் ஒரு வழியாக சமாளித்து வந்தேன்.

எவ்வளவு சிரமம்? கடவுள் அருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை.ஆதார்  அட்டை இல்லார்க்கு அவ்வுலகமில்லை."

  "ஔவையே, கறுப்பு, வெள்ளை -எளிய தமிழில் விளக்கு."

"ஐயனே, வரி கட்டியது வெள்ளை.கட்டாதது கறுப்பு!"

வரி கட்டியது எவ்வளவு? கட்டாதது எவ்வளவு?"

கட்டியது கையளவு. கட்டாதது உலகளவு!"

"சுட்டது எது? சுட முடியாதது எது?"

சுட்டது மக்கள் பணம். சுடமுடியாதது சுவிஸ் பணம்.!"

"ஒழிக்க நினைத்தது எது? ஒழிந்தது எது?"

"ஒழிக்க நினைத்தது கறுப்பு. ஒழிந்தது மக்கள் கையிருப்பு!"
 
" அம்பானி, அதானி போல செல்வந்தராக என் அத்தையார் லட்சுமி கடாட்சம் வேண்டுமல்லவா?"

"தேவையில்லை ஞான பண்டிதா, ஆள்பவர் கடாட்சம் இருந்தால் போதும்!"

என் தந்தை ஈசனுக்கு அடுத்து எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருப்பது எது?"

"அறிந்தும் அறியாதது போல் ஏன் இந்த கேள்வி? கறுப்புதான் வேலவா!"

மானுடர் வாழ்வுக்கு உறு துணையாயிருக்கும் ஏதேனும் இரண்டு புத்தகங்களைக் கூறு."

""பேங்க் பாஸ் புத்தகம். செக் புத்தகம்."

"கேட்ட கேள்விகளுக்கு அழகாக விடை பகன்ற ஔவையே,உனக்கு வரம் ஒன்று தரச் சித்தமாயிருக்கிறேன்.தயங்காமல் கேள்."

"ஐயனே, உன் கடன் அன்றி பிரிதொரு கடன் வாராதிருத்தல் வேண்டும்.

மேலும், அதியமான் என்னும் மன்னன், வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் விலை மதிப்பில்லாத நெல்லிக்கனியொன்றை என்கையில் தள்ளி விட்டான்.

அதற்கு இன்கம் டாக்ஸ் நோட்டீஸ் வராமல் நீதான் அருள் புரிய வேண்டும்"

குளியலும் Eco system ☺

🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
சீயக்காய், 🍀☘☘🌿🌿🌿அரப்பு போட்டு குளிக்க 🚿🚿🚿 சொன்னது🗣 கூந்தல் வளர இல்ல,💆🙅💆‍♂🙅‍♂ கொசுவை ஒழிக்க..!!🐲🐲 முன்னோர்கள் 👴🏿👵🏿சொன்ன எக்கோ சிஸ்டம்..😳🙄🤔😳🙄🤔😳🙄🤔

☝ஒரு மனிதன்☝ ஒரு நாளைக்கு 🤚🤚பத்து லிட்டர் 🚿🤗🚿☺🚿😌🚿😉🚿தண்ணீரில் குளித்தான்🤗 என்றால், அந்த 🤚🤚பத்து லிட்டர் தண்ணீரும் 🚿🚿💦🚿💦🚿💦மரம்,🌳🌴🌱🌿 செடி,கொடிகளுக்கு 🎋🎋🎋பயன்படும்.🤗🤗🤗

ஆனால் சோப்பும்,😈 ஷாம்பும்👹 பயன்படுத்தி 🚿🚿🚿குளிக்கும் பொழுது தண்ணீர்💦💦💦 அத்தனையும் கழிவுநீர் ஆகிவிடுகிறது.😏😏💩😏😏💩😏😏💩

👕👗👚துணி துவைக்க வேப்பங்கொட்டையில் 🌿🌿🌿செய்த சோப்பை பயன்படுத்தினால் 💦💦💦தண்ணீரில் உள்ள மீன்கள்🐟🐠🐟🐠 எல்லாம் வந்து சோப்பு அழுக்கை திண்ணும்.💩🐠💩🐟

சீயக்காய், 🌿அரப்பு போன்ற ☘🍀🌱🍃இயற்கை பொருட்களை பயன்படுத்தி 💆💆‍♂தலைக்கு குளிக்கும் பொழுது 💆🚿💆‍♂🚿அந்த அழுக்கை💩💩 உண்ண 😋😋😋மீன்கள் ஓடிவரும்.🐠🐟🐠🐟

🍯பாத்திரம் கழுவ💦💦 இலுப்பைத்தூள் பயன்படுத்திய காலத்தில் 🕳🐸🕳🐸🐸🕳🕳🐸சாக்கடையில் தவளைகள் வாழ்ந்தன.🐸🐸

ஆயிரக்கணக்கில் உருவாகும் கொசு💩🥚💩🥚💩 🥚முட்டைகளை அந்த 🐸தவளைகள்🐸 உண்டு 👶👦🏻👧👨👩👱‍♀👱👴🏿👵🏿மனிதனை காய்ச்சல் 🤒🤕போன்ற நோய் நொடிகளிலிருந்து 👹👺😈👿👽காப்பாற்றின .🤗

☝ஒரு தட்டான்பூச்சி🐛🦋 நாள் ஒன்றுக்கு ☝ ஆயிரம் கொசு முட்டைகளை💩🥚💩🥚💩🥚💩 தின்றுவிடும் .😋😋இப்பொழுது தவளையும்🐸 இல்லை;😔😔 தட்டானும்🐛🦋 இல்லை.😔😔

அதனால் தான் 😈👿டெங்கு காய்ச்சல்🤕🤒 மனிதனைக் கொல்கிறது .😫😩😣😖😔😫😭🤢🤧முடிந்தவரை 🌿☘🌿☘🌿☘🌿இயற்கையான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.✊
🤗நம்மால் இயற்கைக்கு🌿☘🌿☘🌿☘🌿 எந்த ஆபத்தும் இல்லை 👹👹👹என்ற வகையில் செயல்பட வேண்டும்.💪💪

👇இன்றைய 👶👦🏻👧👨👩👱‍♀👱👴🏿👵🏿மனிதனின் அனைத்து👐🙌👐🙌 துன்பங்களுக்கும் 😔😫😩😢😥🤢🤧காரணம், அவன் 🌿☘🌿☘இயற்கையை மறந்து🙄😳🤔 செயற்கைக்கு 👽மாறியதே
☘🌿இயற்கை மனிதனை👶👦🏻👧👨👩👱‍♀👱👴🏿👵🏿 வாழவைக்கும் ,🤗 செயற்கை அவர்களைக்👽👽👽👽👽👽👽 கொன்றழிக்கும்...😈😈😈😈😈😈😈😈முடிந்த அளவுக்கு இயற்கைக்கு மாறுவோம்
🌄🌄🌄🌄🌄
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

சுயசரிதைகள்-Biographies

சுயசரிதைகள் - எழுதிவர்கள்

My Experiments with truth - மகாத்மா காந்தி

An autobiography - ஜவஹர்லால் நேரு

Prison's diary - ஜெயப்ரகாஷ் நாராயணன்

Mein Kemf - அடால்ஃப் ஹிட்லர்

My Reminicenses - ரவீந்திரநாத் தாகூர்

Wings of Fire - ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்

The Insider - பி.வி. நரசிம்மராவ்

My Presidential Years - ஆர். வெங்கட்ராமன்

I Dare - கிரண்பேடி

My music My Life - பண்டிட் ரவிசங்கர்

Autobiography of an Unknown Indian - நிராத் சி. சௌத்ரி

Friends not Masters - அயூப்கான்

Playing in my way - சச்சின் டெண்டுல்கர்

Daughter of the East - பெனாசிர் பூட்டோ

My Life - பில் கிளிண்டன்

Freedom in Exile - தலாய் லாமா

Son of My Father - டாம் மோரிஸ்

Revenue Stamp - அம்ரிதா ப்ரிதம்

My Days - ஆர்.கே. நாராயணன்

என் சரிதம் - உ. வே. சாமிநாதன்

என் கதை - நாமக்கல் கவிஞர்

என் வாழ்க்கை குறிப்புகள் - திரு. வி. க

நான் என் பிறந்தேன் - எம்.ஜி.ஆர்

வனவாசம் மனவாசம் - கண்ணதாசன்

இதுவரை நான் - வைரமுத்து

நெஞ்சிக்கு நீதி - மு. கருணாநிதி

அத்தியாவசியம் அவசியம்

வைர வியாபாரி ஒருவன் தன் வைரங்கள் அனைத்தையும் விற்றுவிட்டு பணத்தை ஒரு முட்டையில் கட்டிக்கொண்டு தன் சொந்த ஊருக்கு வந்துகொண்டிருந்தான். அவன் தன் ஊருக்கு செல்ல ஒரு ஆற்றை கடக்க வேண்டி இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

வெள்ளத்தை பொருட்படுத்தாத வைர வியாபாரி நீரில் இறங்கி எப்படியாவது ஆற்றை கடந்து சென்றுவிடலாம் என்று எண்ணி அந்த ஆற்றில் இறங்கினான். அப்போது வெள்ள நீர் அவனை நிலை தடுமாற செய்தது.

இதனால் அவன் தன் பண மூட்டையை வெள்ளத்தில் தவறவிட்டான். உடனே ஐயோ என் பண மூட்டையை வெள்ளம் அடித்து செல்கிறதே யாரேனும் காப்பாற்றுங்கள் என்று கதறினான்.

அந்த ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஒரு மீனவனின் காதில் இந்த வைர வியாபாரியின் கதறல் சத்தம் கேட்டது. உடனே அவன் ஆற்றில் குதித்து கடுமையாக போராடி அந்த பணமூட்டையை எப்படியோ மீட்டு எடுத்துக்கொண்டு கரையை அடைந்தான்.

பின் இந்த பண முட்டையை காப்பாற்ற சொல்லி யாரோ கதறினீர்களே, நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் ? நான் உங்கள் பண முட்டையை மீட்டுக்கொண்டு வந்துவிட்டேன். வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்று சத்தமாக அழைத்தான். ஆனால் வெகு நேரம் ஆகியும் யாரும் அதை பெற்றுக்கொள்ள வரவில்லை.

பிறகு தான் அவனுக்கு புரிந்தது, அந்த பண மூட்டைக்கு சொந்தக்காரர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார் என்று. ஐயோ பாவம், அந்த பணக்காரர் இந்த பண முட்டைக்கு பதிலாக தன்னை காப்பாற்றுங்கள் என்று குரல் கொடுத்திருந்தால் இந்த பண மூட்டையை விடுத்து நான் அவரை காப்பாற்றி இருப்பேனே. ஆனால் அவர் இப்படி செய்துவிட்டாரே என்று அந்த மீனவன் வருந்தினான்.

இப்படி தான் நாமும் நம் தேவைகளை சில நேரங்களில் இறைவனிடம் சரியாக வேண்டாமல் வெறும் பணத்தை மட்டுமே வேண்டுகிறோம். அதனால் பல நேரங்களில் நாம் நம் வாழ்வில் நிம்மதியை இழக்க நேரிடுகிறது.

பணம் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவே. அத்தியாவசியம் அல்ல.

மரகத நாணயம்***சிறுகதை

    என்னங்க...!!  இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும்,

   இல்ல உங்க அம்மா இருக்கணும்....!!

யாருன்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க".....!!

என்ன லதா என்ன பண்ணுச்சி அந்த கிழவி...!!

நீ ஏன் டென்சனாகுறே....!!

எனக்கு பிடிக்கலை அவ்வளோ தான்.....!!

சீக்கிரம் நானா அவங்களானு முடிவெடுங்க.....!!

மறுநாள் காலை.....!!

அம்மா நீ சீக்கிரம் கிளம்புமா..!!

" எங்கேடா மகேஷ்.....??? "

" உன்னை ஹோம்ல சேர்த்துடுறேன் மா...!!

அங்கே உனக்கு எல்லா வசதியும் கிடைக்கும்.....!!

உன்னை போல நிறைய பேர் இருப்பாங்க....!!

அவங்க கூட நீ சந்தோசமா இருக்கலாம் மா......!

மகேஷ் எனக்கு இங்க என் பேரக்குழந்தைங்க கூட இருக்கறதுதான்டா சந்தோசம்......!!

உங்கப்பா சாகும்போது உனக்கு வயசு எட்டு....!!

உன்ன வளர்க்க நான் பட்ட கஷ்டம் சொல்லி புரியாது...!!

  எல்லா கஷ்டமும் தீர்ந்து,

   இப்போதான் நான் பேரக்குழந்தைங்க கூட கொஞ்சம் சந்தோசமா இருக்கேன்டா.....!!

என் கடைசி காலத்தை இங்கேயே கழிச்சிட்டு போயிடுறேன்டா...!! "

உன்னை இப்போ விளக்கம்லாம் கேக்கல நான்....!!

உயிரை வாங்காமல் கிளம்பு...

"என்று கொஞ்சம் அதட்டல் தோனியில் மகேஷ் சொல்ல,

கலங்கி போய் நின்றாள் மரகதம்....!

இரண்டு மாதங்கள் உருண்டோடின...!!

மகேசும் லதாவும் கடைத்தெருவுக்கு சென்று திரும்பும் வேளையில்...!!

  எதிரே வந்த லாரி மோதியதில்,

இருவரும் தூக்கி வீசப்பட மகேஷ் சிறு காயத்துடன் தப்பியிருந்தான்...!!

லதாவிற்கு பலத்த அடிபட்டு 'கிருஷ்ணா மருத்துவமனையில்', அனுமதிக்கப்பட்டாள்....!

டாக்டர் என் மனைவி எப்படியிருக்காங்க டாக்டர்... "

Icu வில் இருந்து வெளியேறிய டாக்டரிடம் அழுகுரலில் கேட்டான் மகேஷ்.....!

உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல...!!

ஆக்ஸிடன்ட்ல சிதறின சில கண்ணாடி துண்டுகள்,

அவங்க விழித்திரைய பலமா கிழிச்சிருக்கு.....!!

அவங்களுக்கு பார்வை வர வாய்ப்பில்லை.....!!

அய்யோ....!! டாக்டர் லதாவுக்கு,

கண் பார்வை கிடைக்க ஒண்ணுமே பண்ண முடியாதா....? "

ஒரு வழியிருக்கு.....!!

  இறந்தவங்க யாரோட கண்ணையாவது,

அவங்களுக்கு உடனே பொருத்தினா பார்வை கிடைக்க வாய்ப்பிருக்கு.....!!

நாங்க ஐ பேங்க்ல சொல்லியிருக்கோம்....!!

நீங்களும் உங்க சைடுல ட்ரை பண்ணுங்க.....!!

என்று சொல்லி நடந்த டாக்டரை ,

கலங்கும் கண்களோடு பார்த்து கொண்டிருந்த மகேசின் சொல்போன் சிணுங்கியது.....!

தாய் மரகதம் இருக்கும் ஹோம் நம்பர் திரையில் வர...

   'நானே கடுப்புல இருக்கேன் இந்த கிழவி வேற ,

  பேரனை பார்க்கணும்,
பேசனும்னு ,

உயிர வாங்குது...!!
சே....!!சனியன்....!!

     கை கழுவி விட்டாலும்,
   நம்மள விடாது போல'...

என்று முணு முணுத்துக் கொண்டே ,

மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்தான் மகேஷ்.....!

ஒரு மணிநேரம் கழித்து டாக்டர் வேகமாய் மகேஷிடம் வந்து.....!!

மகேஷ் யூ ஆர் சோ லக்கி...!!

  உங்க மனைவிக்கு கண் கிடைச்சிடுச்சி...!!

இப்போவே ஆபரேஷன் செஞ்சிடலாம்.....!

  நீங்க நர்ஸ் கிட்ட கேட்டு பார்மாலிட்டிஸ்லாம் முடிச்சிடுங்க....!!

ரொம்ப நன்றி டாக்டர்.....!!

ரொம்ப நன்றி "

டாக்டரின் கைகளை பிடித்து கண்ணீர் விட்டான் மகேஷ்....!

மூன்று மணிநேரம் கழித்து,

ஆபரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்தார் டாக்டர்....!!

" டாக்டர் என் மனைவி எப்படியிருக்காங்க "....!!

ஆபரேஷன் நல்லபடியா முடிந்தது மகேஷ்.....!!

இன்னும் ஏழுநாள் கழித்து கட்டு பிரிச்சிடலாம்......!!

அவங்க மயக்கம் தெளிய ரெண்டு மணி நேரமாகும்...!!

அதுக்கப்புறம் நீங்க போய் அவங்களை பாருங்க.....!!

லதா மயக்கம் தெளிந்து கட்டிலில் படுத்திருந்தாள்.....!!

"லதா உனக்கு ஒண்ணுமில்ல..!!

  நிச்சயம் பார்வை திரும்பிடும்னு டாக்டர் சொல்லிருக்காங்க....!!

ம்ம்ம்....!!
    நாம அத்தையை தனியா தவிக்க விட்ட பாவமோ என்னவோ,

இப்படி நடந்துடுச்சி.....!!

திரும்ப அவங்கள கூப்பிட்டு வந்துடுங்க....!!

   நம்ம கூடவே வச்சுக்கலாம்....!!

நான் கட்டு பிரிச்சி முதல்ல பார்க்கறது ,

அவங்க முகமாத்தான் இருக்கணும்...!

சரி லதா...!
    காலையிலே அம்மா போன் பண்ணங்க.....!!

சன்டே நான் அவங்களை பார்க்க போகும் போதே,

  பேரக்குழந்தையை பார்க்கணும் போல இருக்குனு கேட்டாங்க....!!

அதுக்குதான் போன் பண்ணி தொல்லை கொடுக்கறாங்கனு,

நான் சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டேன்....!!

  இதோ இப்பவே அம்மாவுக்கு போன் பண்ணி,

கிளம்பி ரெடியா இருக்க சொல்லிடுறேன் லதா....!!

மகேஷ் ஹோம்க்கு போன் பண்ணி,

" ஹலோ மேடம் நான் மரகதம் அம்மாவோட மகன் பேசறேன்....!!

அவங்ககிட்ட கொஞ்சம் பேசணும்......!!!

என்ன சார் இப்படி பண்ணிட்டிங்களே.....!!

படிச்சவங்க தானே நீங்க...!

  காலையில அவங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சி.....!!

  கடைசியா மகனையும் பேரனையும் பார்க்கணும்னு சொன்னாங்க.....!!

உங்களுக்கு போன் பண்ணா கட் பண்ணிட்டு,

சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டிங்க.....!!

அவங்க மரணத்தோட போராடி உயிரை விட்டாங்க.....!!

அவங்க கடைசி ஆசையை கூட நிறைவேற்றாத நீங்கலாம் என்ன மனுசங்களோ......!!

அப்புறம் ஒரு விசயம்,

எங்க ஹோம்ல யாராச்சும் இறந்துட்டா ,

அவங்க கண்களை தானமா கொடுக்கறது பழக்கம்.....!!

உங்களுக்கு போன் பண்ணினோம்  நீங்க எடுக்கலை....!!

அதனால நாங்களா முடிவு பண்ணி,

'கண்ணை தானமா' கொடுத்துட்டோம்.....!!!

உங்க அம்மா உயிரோட இருக்கும் போது,

உங்களை பார்க்க ஆசைப்பட்டாங்க.....!!

அவங்க கண் 'கிருஷ்ணா ஆஸ்பிட்டல்ல'....,

ஒரு லேடிக்கு வச்சிருக்காங்க....!!

ஒரு வாரம் கழிச்சி ,

"அவங்க கண்ணையாவது "

போய் பாருங்க......!!

அவங்க ,
     "ஆத்மா நிம்மதியாகும்" ......!!

போனை காதிலிருந்து தரையில் தவறவிட்டு,

   அம்மாஆ.......என்று அழுதபடியே ஓடி,

மருத்துவமனையின் அறிக்கையை தேடி பிடித்து பார்த்தவன்.....

அதிர்ந்தான்.....!!

அவள் மனைவி லதாவிற்கு கண்தானம் கொடுத்தவர்

என்னும் அறிக்கையில்,,  "மரகதம் என்றிருந்தது" ....!!!

உயிர் போவதற்கு முன் தன் மகனையும், பாசமான பேரனையும் பார்க்க துடித்த,

அந்த தாயின் ஆசை,
     உள்ளார்ந்த பாசம்,

        இறைவனின்     இதயத்தையும் இளகச் செய்ததோ....??

இறந்து போன அந்த பாசத் தாய் மரகதம்,

இனி தன் ஆசை தீர மகிழ்வோடு தன் பேரனையும், மகனையும் பார்ப்பாள்....!!

மரகதத்தின் நாணயம்

"லதாவின் கண்கள் மூலம்"

 

இறந்த பின்பும் நம்மை வாழ வைப்பது ,

     நம் அன்னை மட்டுமே....!!!

உதிரத்தை பாலாக கொடுத்தவள் தாய்...!!

  நாம் நலமாக வாழ, நமக்காக வாழ்நாள் முழுவதும் தவிக்கும் ,

ஒரே தெய்வம்...."..தாய்"

அவளை ஒருபோதும் கண்ணீர் சிந்தவிடாதீர்கள்...!!

"இரும்பு இதயங்கள் இளகட்டும்" ,.....!!